இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகள்?? வெளியான முக்கிய தகவல்!!
உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகு விமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு 2024 ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பாரீஸில் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் 2032 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது.
என்னங்க சொல்றீங்க….ரூ.500 இருத்தாலே ஆயிரக்கணக்குல சம்பாதிக்கலாமா…?? ” இது புதுசா இருக்கே “..!!
இந்நிலையில் 2036 ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது 2036 ஒலிம்பிக், பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதியுள்ளது. இதற்காக கடந்த அக்டோபர்.1ம் தேதி கடிதம் எழுதியதாக விளையாட்டுத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். வரும் 2032-ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடங்கள் இறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



























