என்னங்க சொல்றீங்க….ரூ.500 இருத்தாலே ஆயிரக்கணக்குல சம்பாதிக்கலாமா…?? ” இது புதுசா இருக்கே “..!!
தற்போதைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் வங்கியில் பணத்தை சேமிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. மேலும், வங்கி சேமிப்பு திட்டங்களை போலவே post office சேமிப்பு திட்டங்களும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது, வங்கி சேமிப்பு கணக்கும் post office சேமிப்பு கணக்கும் ஏறத்தாழ சமமாக கருதப்படுகிறது. வங்கியில் வழங்கப்படும் ATM கார்டு, e-பேங்கிங், பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் செய்வது போன்ற பல்வேறு வசதிகளும் post office-ல் உள்ளன. இது மட்டுமின்றி, இந்த post office திட்டங்கள் குறைந்த முதலீட்டிற்கு அதிக லாபத்தை அளிக்கிறது. மேலும், ரூ. 500 தொடங்கி எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் இதில் சேமிப்பு கணக்கை தொடங்கலாம். மேலும், இது மாதாந்திர டெபாசிட் திட்டங்களுக்கு 4% வட்டி விகிதத்தை வழங்குகிறது. உதாரணமாக, இப்போது நீங்கள் மாதந்தோறும் ரூ. 1000 டெபாசிட் செய்கிறீர்கள் என்றால், ஓர் ஆண்டுக்கு பிறகு ரூ. 12,000 மற்றும் ரூ. 480 என்ற 4% வட்டியை சேர்த்து மொத்த தொகையாக உங்களுக்கு ரூ. 12,480 கிடைக்கும். இதை மேலும் 1 ஆண்டு நீடிக்கும் பட்சத்தில், ரூ. 24,960 உங்களுக்கு கிடைக்கும்.
அதுமட்டுமின்றி, நீங்கள் 1 ஆண்டுக்கு பிறகு கணக்கை மூட நினைத்தால் படிவத்தை நிரப்பி, சமர்ப்பித்த பின், நீங்கள் கணக்கை மூடலாம். நீங்கள் கணக்கை மூடும் போது எவ்வளவு தொகை இருப்பில் இருக்கிறதோ அப்படியே உங்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
























