அமெரிக்க மீதான வரியை குறைக்க திட்டமிடும் இந்தியா..!! இந்தியாவை கடுமையாக விமர்சித்த டிரம்ப்..!!
தெற்காசிய நாடுகளுக்கு ஏப்ரல் 2ம் தேதி முதல் பதிலுக்கு பதில் வரியை அமெரிக்கா விதிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அதன் முதற்கட்டமான, மெக்ஸிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை விதிக்கும் செயல்முறை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வரி விதிப்பு குறித்து டிரம்ப் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது . அது குறித்து கீழே விரிவாக காண்போம்.
சென்னையில் பிங்க் ஆட்டோ சேவை துவக்கம்…அதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்குன்னு தெரியுமா…??
அதாவது, இன்று (08-03-2025) அமெரிக்கா வெளியுறவு அமைச்சகத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப் “இந்தியாவில் அமெரிக்காவால் எந்த பொருட்களையும் விற்க முடியவில்லை, அந்த அளவிற்கு அதிக வரி வசூலிக்கப்படுகிறது. தற்போது யாரோ இதை அம்பலப்படுத்தியதால் வரிகளை வெகுவாக குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது” என கூறியுள்ளார். இதை தொடர்ந்து, அமெரிக்காவிற்கு அதிக வரிகளை விதிக்கும் தெற்காசிய நாடுகளான சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் உடனடியாக தங்களது வரிவிதிப்பை மாற்றியமைக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
























