இந்தியாவில் காவல் துறையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை – மத்திய அரசு தகவல்!

0
இந்தியாவில் காவல் துறையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை - மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் காவல் துறையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை - மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் காவல் துறையில் பெண்கள் பலத்தை அதிகரிக்க நடவடிக்கை – மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் காவல் துறையில் பெண்கள் பலத்தை 33 சதவீதம் அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருவதாக தற்போது 11.75 சதவீத பெண்கள் மட்டுமே இருப்பதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறை

இந்தியாவில் அரசு சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் காவல்துறையில் பெண்களின் பங்கு குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நிதியானந்த் ராய் பதில் அளித்துள்ளார். அதாவது காவல் துறையில் பெண்களின் பலத்தை 33 சதவீதமாக அதிகரிப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு அறிவுறுத்தலை வழங்கியது.

TNPSC Online Classes

அதில் நாட்டின் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் குறைந்தது 3 பெண் உதவி ஆய்வாளர்கள், 10 பெண் காவலர்கள் பணியில் இருந்தால் 24 மணி நேரமும் பொதுமக்களுக்கு பெண் காவலர்களின் உதவி கிடைக்கும் என்பதால் காவல்துறை காலியாக உள்ள காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப மாநிலங்களுக்கு வலியுறுத்தப்பட்டது.

தமிழக பள்ளி & கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை – அரசு அறிவிப்பு!

ஆனால் கடந்த ஆண்டு நாடு முழுவதும் காவல் துறையில் பெண்கள் 11.75 சதவீதம் மட்டுமே பணியாற்றுகின்றனர். அதனால் காவல்துறையில் பெண்கள் இணைவதை ஊக்குவிக்கும் வகையில் பெண் காவலர்களுக்கு சில சலுகைகளை வழங்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!