இந்தியாவில் ஒரே நாளில் 42,909 பேருக்கு கொரோனா – 380 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்து வந்த நிலையில் தற்போது நோய் தொற்று பரவும் விகிதம் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஒரே நாளில் 380 பேர் பலியாகியுள்ளனர்.
கொரோனா நிலவரம்:
நாடு முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தீவிரமாக பரவியது. இதனால் மக்கள் பலரும் நோய்வாய்ப்பட்டு கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து நோய் தொற்று பரவும் விகிதத்தை குறைக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நடவடிக்கைகளின் காரணமாக நோய்த் தொற்றின் தாக்கம் குறைய தொடங்கியதால் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது.
IND vs ENG 4வது ஓவல் டெஸ்ட் – இங்கிலாந்து அணி அறிவிப்பு, சாம் கரனுக்கு குட் பை?
தற்போது சில மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரிவர பின்பற்றாததால் நோய் பரவும் விகிதம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இந்தியாவில் நோய்த்தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் கேரள மாநிலம் முன்னணி வகிக்கிறது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தற்போது நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.38 லட்சமாக உயர்ந்துள்ளது.
TN Job “FB
Group” Join Now
இன்று காலை 8 மணி வரையிலான நிலவரப்படி நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.26 கோடியை தாண்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 380 ஆக பதிவாகி உள்ள நிலையில் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,38,210 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 34,763 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3,19,23,405 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 3,76,324 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இதுவரை 63,43,81,358 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.