IND vs AUS FINAL: இந்தியா போராடி தோல்வி.. ஆஸி., 6வது முறை சாம்பியன்!!!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று உலகக் கோப்பை இறுதி போட்டியியல் மல்லுக்கட்டியது. அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இந்த போட்டியில் இரு அணிகளும் சமபலத்துடன் மோதியதால் போட்டி விறுவிறுப்பாக சென்றது.
இந்திய அணி 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி அந்த இலக்கை எட்டிடப்பிடித்தது. மேலும் 6வது முறையாக சாம்பியன் பதட்டம் வென்றுள்ளது….
IND vs AUS FINAL Live Updates:
AUS Innings – 241/4 (43)
- 11-43வது ஓவர்: (241-4) ஆஸ்திரேலிய துவக்க வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாட துவங்கி விட்டார். அவருக்கு லபுசேன் நல்ல உறுதுணையாக பேட்டிங் செய்தார். அதனால் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மளமளவென உயரத் தொடங்கியது. நிலைத்து நின்று நங்கூரம் அமைத்த ஹெட் சதமடித்து அசத்தினார். லபுசேன் அரைசதம் விளாசினார். அவர்களின் ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி வேகமாக முன்னேறியது. கடைசியில் ஹெட் அவுட் ஆனாலும், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது…..
1-10வது ஓவர்: (60-3) ஆஸ்திரேலிய அணிக்கும் இந்தியாவை போலவே துவக்க வீரர்கள் சொதப்பலாக ஆடினர். வார்னர், மார்ஷ் மற்றும் ஸ்மித் ஆகியோர் விரைவிலேயே வெளியேறி அதிர்ச்சி அளித்தனர். குறிப்பாக ஷமி மற்றும் பும்ராஹ் விக்கெட் அறுவடையில் இறங்கினர். இதனால் இந்திய அணியின் கை ஓங்கி உள்ளது. எனினும் குறைவான இலக்கு என்பதால் விரைவிலேயே விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியம்.
ஆஸ்திரேலிய அணிக்கு 241 ரன்கள் இலக்கு…
IND Innings – 240/10 (50)
- 31-50வது ஓவர்: (240-10) சொதப்பலாக சென்ற இந்திய அணியின் பேட்டிங் கடைசி வரை நிமிரவில்லை. அதிகபட்சமாக ராகுல் 66 ரன்கள் குவித்து அணி 200 ரன்கள் கடக்க உதவி செய்தார். சூர்யகுமார் யாதவ் 18 ரன்கள் தவிர பின் வரிசையில் ஒருவரையும் ஜொலிக்கவில்லை. அதனால் ஸ்கோர் மிக மந்தமாகவே சென்றது. சவாலான ஸ்கோர் செல்ல முடியவில்லை என்றாலும் இந்திய அணி ஒரு அளவிற்கு சமாளித்து 240 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்ட்ரைக் 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் மற்றும் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
- 21-30வது ஓவர்: (152-4) தொடர்ந்து நிலைத்து நின்ற கோஹ்லி பந்துகளை அதிகமாக வீணடிக்காமல் ஓடியே ரன்களை சேகரித்தார். கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த அவர் அரைசதத்தை பூர்த்தி செய்ய மறுபுறம் ராகுல் இந்தியாவிற்கு தேவையான பவுண்டரியை விளாசினார். இருவரையும் சற்று ஸ்கோரை கவனித்து விளையாட அதற்குள் கம்மின்ஸ் பந்தில் கோஹ்லி போல்டானார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வரிசையாக வெளியேறியதால் இந்தியாவிற்கு நெருக்கடி அதிகரித்து உள்ளது. தற்போது களத்தில் இருக்கும் ராகுல் மற்றும் ஜடேஜா வலுவான ஸ்கோரை நோக்கி அணியை கொண்ட செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
- 11-20வது ஓவர்: (115-3) கடந்த இரு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் இந்த முறை ஒரு பவுண்டரி அடித்த கையேடு வெளியேறினார். துவக்க வரிசை வேகமாக சரிந்ததால் இந்திய அணிக்கு நெருக்கடி உண்டானது. இதன் பின்னர் கோஹ்லியுடன் ஜோடி சேர்ந்த ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பவுண்டரிகள் இல்லாமல் ஸ்கோர் மந்தமானது. ஆனால் இருவரும் சற்று நிலையான அஸ்திவாரத்தை அமைத்தனர் என்று சொல்லலாம்.
- 1-10வது ஓவர்: (80-2) முதல் 10 ஓவர்களில் இந்திய அணி மட்டையை வேகமாக சுழற்றியது. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக பறக்கவிட்டார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் கில் 4 ரன்களில் ஸ்டார்ச் பந்தில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய கோஹ்லி தன் பங்கிற்கு பந்துகளை நாலாபுறமும் ஓட விட்டார். இதனால் ஸ்கோர் மளமளவென அதிகரித்தது. ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா அரைசத வாய்ப்பை தவறவிட்டு தனது விக்கெட்டை இழந்தார்.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
- இந்தியா – ரோஹித் சர்மா (C) , ஷுப்மான் கில் , விராட் கோலி , ஷ்ரேயாஸ் ஐயர் , கே.எல். ராகுல் (WK) , சூர்யகுமார் யாதவ் , ரவீந்திர ஜடேஜா , முகமது ஷமி , ஜஸ்பிரித் பும்ரா , குல்தீப் யாதவ் , முகமது சிராஜ்
- ஆஸ்திரேலியா – டிராவிஸ் ஹெட் , டேவிட் வார்னர் , மிட்செல் மார்ஷ் , ஸ்டீவன் ஸ்மித் , மார்னஸ் லாபுஷாக்னே , க்ளென் மேக்ஸ்வெல் , ஜோஷ் இங்கிலிஸ் (WK) , மிட்செல் ஸ்டார்க் , பாட் கம்மின்ஸ் (C) , ஆடம் ஜம்பா , ஜோஷ் ஹேசில்வுட்