அரசு பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு அதிகரிப்பு – நீதிமன்ற உத்தரவு!

0
அரசு பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு அதிகரிப்பு - நீதிமன்ற உத்தரவு!

அரசு பணிகளுக்கான ஆட் சேர்ப்பின்  அதிகபட்ச வயது வரம்பை அதிகரிக்க அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

வயது வரம்பு அதிகரிப்பு:

தெலுங்கானா மாநிலம் ஆந்திராவில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு ஒரு சில வருடங்கள் ஆகிறது. மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு அரசு பணிகளுக்கான ஆட் சேர்ப்பு  அறிவிப்பு வெளியிடுவதில் ஒரு நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்த நீண்ட இடைவெளியை கருத்தில் கொண்டு அரசு தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்கள் பணிக்கான அதிகபட்ச வயது வரம்பை 44 இல் இருந்து 51 ஆக நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2024 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்காத காரணத்தால் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. எனவே நீதிபதிகள் அரசு பணிக்கான ஆட்சேர்ப்புக்கான   அதிகபட்ச வயது வரம்பை உயர்த்தும் மனு தொடர்பாக பரிசீலனை செய்து தேவையான உத்தரவை வெளியிடுமாறு நீதிபதிகள் அரசுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!