EPFO நிறுவனத்தில் 64 காலியிடங்கள் – ரூ.2,09,200/- மாத ஊதியம் || அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!  

0
EPFO நிறுவனத்தில் 64 காலியிடங்கள் - ரூ.2,09,200/- மாத ஊதியம் || அரிய வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!  

 Joint Director, Deputy Director, Assistant Director ஆகிய பணிகளுக்கென Employees’ Provident Fund Organisation (EPFO) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது இன்று (29.02.2024) வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 64 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் EPFO India
பணியின் பெயர் Joint Director, Deputy Director, Assistant Director
பணியிடங்கள் 64
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

EPFO பணியிடங்கள்:

EPFO நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Joint Director – 06 பணியிடங்கள்

Deputy Director – 22 பணியிடங்கள்

Assistant Director – 36 பணியிடங்கள்

EPFO கல்வி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி வாரியங்களில் B.Sc, BCA, BE, B.Tech, MCA, M.Sc முடித்தவராக இருப்பது போதுமானது ஆகும்,

அரசு பணிக்கான அதிகபட்ச வயது வரம்பு அதிகரிப்பு – நீதிமன்ற உத்தரவு!

EPFO அனுபவ காலம்:

இந்த EPFO நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

EPFO வயது:  

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

EPFO மாத சம்பளம்:

இந்த EPFO நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.15,600/- முதல் ரூ.2,09,200/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

EPFO தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

EPFO விண்ணப்பிக்கும் விதம்:

இந்த EPFO நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 14.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!