மாணவர்களுக்கு கல்விக் கடன் உயர்வு – கூட்டுறவுத்துறை அமைச்சர் அதிரடி!

0
மாணவர்களுக்கு கல்விக் கடன் உயர்வு - கூட்டுறவுத்துறை அமைச்சர் அதிரடி!

தமிழகத்தில் கல்விக் கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.

கல்விக்கடன்:

12ம் வகுப்பு முடித்து உயர் படிப்புகளுக்காக கல்லூரியில் சேரும் மாணவர்கள் பொதுத்துறை வங்கிகள், தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் கடன் வாங்கி தங்களது படிப்பு செலவிற்கு பயன்படுத்தி வருகின்றனர். புத்தக கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக்கான கட்டணம், டியூஷன் கட்டணம் என பல்வேறு செலவுகள் இருக்கையில் இந்த கடன் தொகை பயனுள்ளதாக இருந்து வருகிறது.

BECIL ஆணையத்தில் 390+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இந்நிலையில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த கல்விக் கடன் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். முதலாம் ஆண்டு மாணவர்கள் மட்டுமல்லாது 2-ம் ஆண்டு, 3ம் ஆண்டு மாணவர்களும் கல்விக் கடன் வாங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!