முத்தமிழ் முருகன் மாநாடு 2024 – ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

0
முத்தமிழ் முருகன் மாநாடு 2024 - ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024-ல் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கால அவகாசம் நீட்டிப்பு:

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் 24, 25-ம் தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு 2024 ஆனது பழனியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பக்தர்கள் பங்கேற்கவும் ஆய்வு மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிக்கவும் https:/muthamizhmuruganmaanadu2024.com/ என்ற தனி இணையதளம் தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆய்வு கட்டுரைகளை சமர்பிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தலைப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது.

BECIL ஆணையத்தில் 390+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

அவ்வாறு எழுதப்படும் கட்டுரையில் மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், வாட்ஸ்அப் எண் மற்றும் புகைப்படம் முதலியவை கட்டாயம் இடம் பெற வேண்டும் என்றும் சுருக்கக்குறிப்பு மற்றும் முழுக் கட்டுரை இணையதளம் வாயிலாக ஜூன் 20-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. தற்போது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் ஜூன் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!