
தமிழக பட்ஜெட்டில் பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்…மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிய மாற்றம்..!! இத எதிர்பாக்கலைல..!!
2025 -2026 ஆம் ஆண்டு நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை 9.30 மணியில் இருந்து தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்து கொண்டிருக்கிறார். மேலும், இதில் மக்கள் நலனுக்காக பல்வேறு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, “கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில், புதிதாக குடும்ப அட்டைப்பெற்றவர்களுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்புகள் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இத்திட்டத்திற்காக, “தமிழ்நாடு பட்ஜெட்டில் ரூ. 13,807 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்” தெரிவித்துள்ளார். மேலும், “தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் மக்கள் தொகையை சமாளிக்கும் நோக்கில், சென்னைக்கு அருகில் 2000 ஏக்கர் பரப்பளவில் புதிய நகரம் உருவாக்கப்படும்” என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.


























