TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – புதிய வழிமுறைகள்!

0
TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு - புதிய வழிமுறைகள்!
TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு - புதிய வழிமுறைகள்!
TNPSC சான்றிதழ் சரிபார்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – புதிய வழிமுறைகள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது வெளியிடப்பட்ட அறிவுரைகளில் சான்றிதழ் சரிபார்ப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விண்ணப்பதாரர் விதிமுறைகள்:

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படும். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளை எழுதும் விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளை தேர்வாணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. விண்ணப்பதாரர்களின் நலனை கருத்தில் கொண்டு தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் விதிகள் அரசாணைகள் தேர்வாணைய நடைமுறை விதிகள் போன்றவற்றை உள்ளடக்கிய விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் வெளியிடப்படுகின்றன. மேலும் தேர்வாணையத்தின் அறிவுரைகள் தற்போது 20.09.2021 அன்று முதல் திருத்தி அமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றனர்.

TNPSC தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை – முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!

சான்றிதழ் சரிப்பார்ப்பு:

  • விண்ணப்பதாரரால் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் விண்ணப்பதாரரின் தகுதியினை உறுதிப்படுத்துவற்காக சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பானது தெரிவுப்பணியின் அடுத்தநிலை அல்ல, சான்றிதழ் சரிபார்ப்பானது தேர்வாணையத்தால் தேவையென கருதப்படும் பட்சத்தில் எந்த நிலையிலும் மேற்கொள்ளப்படும்.
  • விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள விவரங்களுக்கு ஆதாரமாக மூலச் சான்றிதழ்களை இணையவழி சான்றிதழ் சரிபார்ப்பிற்க்காக தேர்வாணையத்தினால் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.தவறினால் விண்ணப்பதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
  • ஒவ்வொரு ஆவணங்களும்/சான்றிதழ்களும் 200 DPI ஒளிச் செறிவில் 300KB முதல் 500 KBக்குள் PDF வடிவில் இருக்க வேண்டும் .
  • தேர்வாணைய இணையத்தில் அவ்வப்போது வெளியிடப்படும் விண்ணப்பதாரருக்கான குறிப்பாணையின் படி தங்களது ஆவணங்களை / மூலச் சான்றுகளை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் நடத்தப்படும் இ-சேவை மையம் வழியாக பதிவேற்றம் செய்யலாம்.

தமிழக தனியார் பள்ளிகள் கல்வி கட்டண நிர்ணயம் – செப்.30 கடைசி நாள்!

  • இவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்து மூலச் சான்றுகளும் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பிற்கு விண்ணப்பதாரர் அழைக்கப்படும் போதோ/ தேர்வாணையம் கேட்கும் போதோ விண்ணப்பதாரரால் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • இணையவழி விண்ணப்பத்தில் சிறப்பு இனங்களை கோரியுள்ள விண்ணப்பதாரர் அதற்கான படிவங்களை தேர்வாணைய இணையதளத்திலும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான குறிப்பாணையில் அச்சிடப்பட்ட QR Code-லும் காணலாம். விண்ணப்பதாரர் மேற்குறிப்பிட்ட படிவங்களின் படி மட்டுமே ஆதார ஆவணங்களை பதிவேற்றம் செய்ய / சமர்ப்பிக்க வேண்டும்.
  • இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படாத தகவல்களுக்கு ஆதரவாக பதிவேற்றம் செய்யப்படும் / சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் கருத்திற் கொள்ளப்பட மாட்டாது / பரிசீலிக்கப்பட மாட்டாது.
  • தேர்வாணையத்திற்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தாரிடம் கோரப்படும் ஆவணங்கள் கடந்த காலங்களில் ஏற்கனவே பதிவேற்றம் செய்து / சமர்ப்பித்து இருந்தாலும் அவற்றை கோரும் பொழுது மறுபடியும் பதிவேற்றம் செய்ய / சமர்ப்பிக்க வேண்டும்.
  • இணையவழியிலோ நேரடியாகவோ சான்றிதழ் சரிபார்ப்புக்காக பதிவேற்றம் செய்யப்படும் / சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் தமிழிலோ ஆங்கிலத்திலோ, இரு மொழிகளிலுமோ இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் மட்டுமே வழங்கப்பட ஆவணங்களை தமிழிலோ ஆங்கிலத்திலோ மொழி பெயர்த்து மூலச் சான்றை அளித்த அலுவலரின் சான்றொப்பதோடு பதிவேற்றம் செய்ய / சமர்ப்பிக்க வேண்டும். தமிழ் அல்லது ஆங்கிலம் அல்லாத பிற மொழிகளில் மட்டுமே வழங்கப்பட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் / சமர்ப்பிக்கும் பட்சத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
  • தேர்வாணையம் விரும்பும் பொழுது விண்ணப்பதாரை அடையாளம் காண்பதற்காக Biometric Verification மேற்கொள்ளப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!