TNPSC தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை – முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!

1
TNPSC தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை - முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
TNPSC தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை - முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!
TNPSC தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை – முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் முறை குறித்த புதிய அறிவுறுத்தல்களை தேர்வாணையம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்‌ www.tnpscexams.in / www.tnpsc.gov.in ஆகிய தேர்வாணையத்தின்‌ இணையதளங்கள்‌ மூலம்‌ இணைய வழியில்‌ மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்‌. விண்ணப்பதாரர்‌ தங்களுடைய ஒருமுறைப்‌ பதிவுடன்‌ஆதார்‌ எண்ணை இணைப்பது கட்டாயமாகும்‌. விண்ணப்பதாரர்‌ ஒருமுறைப்‌ பதிவில்‌ தங்களது ஆதார்‌ எண்ணினை இணைப்பதற்கான ஒப்புதலை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்‌ அனைவரும்‌ புதிதாக ஒருமுறைப்‌ பதிவு எண்ணை உருவாக்குவதற்கும்‌, புதுப்பிப்பதற்கும்‌ / ஏற்கனவே பயன்பாட்டில்‌ உள்ள ஒருமுறைப்‌ பதிவில்‌ உள்நுழைவதற்கும்‌, எந்த ஒரு தேர்வு அறிவிக்கைக்காக விண்ணப்பிப்பதற்கும்‌ ஆதார்‌ எண்ணினை இணைப்பது கட்டாயமானதாகும்‌.

ஒரு முறைப்பதிவு என்பது பதிவு செய்த நாள்‌ முதல்‌ ஐந்து ஆண்டுகள்‌ வரை செல்லுபடியாகும்‌. ஐந்து ஆண்டுகள்‌ முடிந்த பின்னர்‌, விண்ணப்பதாரர்‌, ஒருமுறைப்‌ பதிவினை அதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தினைச்‌ செலுத்தி கட்டாயம்‌ புதுப்பித்துக்‌ கொள்ள வேண்டும்‌. ஒருமுறைப்‌ பதிவு என்பது தேர்வுக்கான விண்ணப்பத்திலிருந்து மாறுபட்டதாகும்‌. விண்ணப்பதாரர்‌ தேர்வு எழுத விரும்பும்‌ ஒவ்வொரு தேர்விற்கும்‌, தனித்தனியே இணையவழியில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

ஒருமுறைப்பதிவின்போது, விண்ணப்பதாரர்‌ மூன்று மாதங்களுக்குள்‌ எடுக்கப்பட்ட தங்களது புகைப்படத்தினை ஸ்கேன்‌ செய்து, கையொப்பத்தினை குறிப்பிட்ட அளவில்‌ சேமித்து, பதிவேற்றம்‌ செய்வதற்கு தயாராக வைத்திருக்க வேண்டும்‌. ஒரு முறைப்பதிவு என்பது எந்தவொரு பதவிக்கான விண்ணப்பம்‌ அல்ல. இது விண்ணப்பதாரரின்‌ விவரங்களைப்‌ பெற்று அவர்களுக்கென தனித்தனியே தன்விவரப்‌ பக்கம்‌ ஒன்றினை உருவாக்க மட்டுமே பயன்படும்‌. எந்தவொரு பதவிக்கும்‌ விண்ணப்பிக்க விரும்பும்‌ விண்ணப்பதாரர்‌ தேர்வாணைய இணையதளத்தில்‌ அறிவிக்கப்பட்டுள்ள அப்பதவிக்குரிய அறிவிக்கையில்‌ உள்ளீடு வழியே ஒருமுறைப்‌ பதிவுக்குரிய பயனாளர்‌ குறியீடு மற்றும்‌ கடவுச்சொல்‌ ஆகியவற்றை உள்ளீடு செய்து விண்ணப்பிக்க வேண்டும்‌.

விண்ணப்பதாரர்‌ குறியீடு மற்றும்‌ கடவுச்சொல்‌ ஆகியவற்றை தாங்களே உருவாக்கிக்‌ கொள்ள வேண்டும்‌. ஒரு முறைப்பதிவு செய்வதற்கு, பயன்பாட்டில்‌ உள்ள மின்னஞ்சல்‌ முகவரி மற்றும்‌ அலைபேசி எண்‌ ஆகியவை கட்டாயமாகும்‌. மின்னஞ்சல்‌ முகவரி மற்றும்‌ அலைபேசி எண்‌ ஆகியவற்றைத்‌ தொடர்ந்து பயன்பாட்டில்‌ வைத்திருக்க வேண்டும்‌. தேர்வு தொடர்பான செய்திகள்‌ அனைத்தும்‌ விண்ணப்பதாரர்‌ பதிவு செய்துள்ள மின்னஞ்சல்‌ முகவரி மற்றும்‌ அலைபேசிக்கு மட்டுமே அனுப்பப்படும்‌. தேர்வாணையத்தினால்‌, எவ்வித தகவல்களும்‌ அஞ்சல்‌ வழியே அனுப்பப்பட மாட்டாது.

நாடு முழுவதும் அக்.30 வரை முழு ஊரடங்கு அமல்? உண்மை நிலவரம் இதுதான்!

விண்ணப்பதாரர்‌ இணையவழியில்‌ பதிவு செய்யும்பொழுது, பத்தாம்‌ வகுப்பு பதிவு எண்‌, சான்றிதழ்‌ எண்‌, தேர்ச்சி பெற்ற ஆண்டு, மாதம்‌, பயிற்று மொழி மற்றும்‌ சான்றிதழ்‌ வழங்கிய குழுமம்‌ ஆகிய தகவல்களை சரியாகப்‌ பதிவு செய்ய வேண்டும்‌. மேற்படி விவரங்கள்‌ தவறாக பதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டால்‌, தேர்வுக்கான இணையவழி விண்ணப்பம்‌ எந்தவொரு நிலையிலும்‌ நிராகரிக்கப்படும்‌. பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சிக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பெண்‌ சான்றிதழ்கள்‌ வைத்திருக்கும்‌ விண்ணப்பதாரர்‌, தாங்கள்‌ இறுதியாக தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற சான்றிதழில்‌ உள்ள விவரங்களைப்‌ பதிவு செய்ய வேண்டும்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!