இந்தியாவில் கல்வி நிலையங்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – UGC அறிவிப்பு!

0
இந்தியாவில் கல்வி நிலையங்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் - UGC அறிவிப்பு!
இந்தியாவில் கல்வி நிலையங்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் - UGC அறிவிப்பு!
இந்தியாவில் கல்வி நிலையங்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – UGC அறிவிப்பு!

இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையில் அறிவிக்கப்பட்டுள்ளபடி மாணவர் திறன்களை வளர்க்கும்படி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது யுஜிசி அனைத்து பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

யுஜிசி பரிந்துரை

நாட்டில் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை மேம்படுத்த யுஜிசி என்ற பல்கலைக்கழக மானியக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு பல்கலைக்கழகங்களை ஒழுங்குமுறைப்படுத்துதல், பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் இக்குழு மத்திய, மாநில அரசுகளுக்கும் உயர்கல்வி நிலையங்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் பல்வேறு பரிந்துரைகளை யுஜிசி அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் சிசேரியன் பிரசவங்கள்? அமைச்சர் முக்கிய விளக்கம்!

இதில் குறிப்பாக ஒரு மாணவர் ஒரே பல்கலைக்கழகத்தில் அல்லது வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் ஒரே சமயத்தில் இரண்டு முழுநேர பட்டப்படிப்புகளை படிக்க முடியும் என்று UGC அனுமதி அளித்துள்ளது. மேலும் இதனை மாணவர்கள் நேரடி முறையின் மூலமாகவோ அல்லது தொலைதூர கல்வி முறை மூலமாகவோ அல்லது ஆன்லைன் முறை மூலமாகவோ அல்லது பகுதி நேர முறை மூலமாக படிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான முடிவுகளை அந்தந்த பல்கலைக்கழகங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் யுஜிசி அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
https://www.youtube.com/watch?v=vTYDk2UXwXo

அதன்படி மாணவர்கள் தங்களின் தனித்திறனை வெளிப்படுத்த பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தற்போது அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு பல்கலைக்கழகம் மானியக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தேசிய கல்விக் கொள்கை அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களை பன்முகத் தன்மை கொண்ட கல்வி நிலையங்களாக மாற்ற பரிந்துரை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!