TCIL நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – ரூ.2,20,000/- ஊதியம்!
மத்திய அரசு நிறுவனங்களில் ஒன்றான டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் (TCIL) வெளியிட்ட அறிவிப்பில் AGM, GM, JGM, DGM ஆகிய பணிகளுக்கு என காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.2,20,000/- வரை ஊதியமாக கொடுக்கப்படும். இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க நாளை (05.09.2022) இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TCIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்டில் (TCIL) காலியாக உள்ள Deputy General Manager (E5) / Assistant General Manager (E4) பணிக்கு என 01 பணியிடமும், General Manager (E7) பணிக்கு 02 பணியிடங்களும், Joint General Manager (E6) பணிக்கு 02 பணியிடங்களும், Deputy General Manager (E5)-Deputation பணிக்கு 02 பணியிடங்களும், Assistant General Manager (E4) / Manager (E3) / Deputy Manager (E2) பணிக்கு என 06 பணியிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது DGM பணிக்கு 45 வயது என்றும், AGM பணிக்கு 40 வயது என்றும், Manager பணிக்கு 36 வயது என்றும். DM பணிக்கு 33 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் / கல்லூரியில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree, LLB, B.Sc, BE, B.Tech, ME, M.Tech, MCA ஆகிய Degree-களில் ஏதேனும் ஒன்றை பெற்றவராக இருக்க வேண்டும்.
இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு அல்லது Deputation என்னும் தேர்வு முறை மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
TCIL விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே மீதம் உள்ளதால் (05.09.2022) விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Download Notification & Application Link
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்