முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 16

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி – 16

உழவர் திருநாள்

  • பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா.
  • உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

ஆனந்த ரங்கம் பிள்ளை நினைவு தினம்

  • பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும் துய்ப்ளெக்சு என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர்.
  • பதினெட்டாம் நூற்றாண்டு காலத்திய பிரெஞ்சு அரசு பற்றி அறிய உதவும் சிறந்த வரலாற்றுக் கருவூலமாகவும் ஆவணமாகவும் இலக்கியமாகவும் திகழக்கூடிய நாட்குறிப்புகளைத் தந்தவர்.
  • 1736 முதல் 1761 வரை ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகள் நாட்குறிப்பு எழுதியுள்ளார்.
  • உலக நாட்குறிப்பு இயக்கத்தின் முன்னோடியான புகழ் பெற்ற ஆங்கில நாட்குறிப்பாளர் சாமுவேல் பெப்பீசு என்பவரைப் போன்று தமிழில் நாட்குறிப்பு எழுதியமையால், இவர் இந்தியாவின் பெப்பீசு எனவும் நாட்குறிப்பு வேந்தர் எனவும் போற்றப்படுகின்றார்.
  • இவரது நாட்குறிப்பு அக்காலத்தில் நடந்த சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள் போன்றவற்றின் பதிவாகத் திகழ்கிறது. பிரெஞ்சு ஆளுநர் மொழிபெயர்ப்பாளராகவும் பன்மொழிப் புலவராகவும் இருந்தவர்.
  • இவரின் நாட்குறிப்பு மூலம் நமக்கு பதினெட்டாம் நூற்றாண்டு தென்னிந்தியஆளுமைகளைப் பற்றியும், முக்கியமான அரசியல், இராணுவ நிகழ்வுகளைப் பற்றியும் அறிய முடிகிறது.
  • இவரது நாட்குறிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் இன்றளவும் நடைபெற்று வருகின்றன.

மறைவு

  • ஆனந்தரங்கம் மறைந்து 85 ஆண்டுகள் கழித்தே அவர் எழுதிய நாட்குறிப்புக்கள் கிடைத்தன.
  • இந்த நாட்குறிப்புக்களை 1896 இல் பிரெஞ்சு அரசாங்கம் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்துள்ளது.
  • இவரின் நாட்குறிப்பு எட்டுத் தொகுதிகளாக வெளிவந்துள்ளது. ஆனந்தரங்கம் தமிழ் மொழியில் பற்றுடையவராகத் திகழ்ந்தார். தமிழிலேயே தான் கையெழுத்திட்டார்.
  • நவீன தமிழ் இலக்கியத்தில் அவரது பங்கு முக்கியமானதாகும். இவர் தனது 51 ஆம் வயதில் 1761 ஆம் ஆண்டு சனவரித் 16 ஆம் நாள் மறைந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!