தமிழகத்தில் இந்தெந்த பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..!!
ஆண்டுதோறும் மே மாதத்தின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் மே மாத இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருமவழை நடப்பாண்டு முன்கூட்டியே நிகழும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மே 13 ஆம் தேதி தொடங்கி பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று கூட சென்னையில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் இது குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதாவது, கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் கோடை மழை 25 செ.மீ பெய்துள்ளது என்றும், இது இயல்பை விட 129% அதிகம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும், “தென்காசி, தேனி, நீலகிரி, கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று (31-05-2025) இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது”.


























