இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல்.. ஐ.ஐ.டி. மெட்ராஸ் 3ம் இடம்!!
ஆசியா பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலை ஆய்வு செய்து வெளியிட்டு வருகிறது. கல்லூரிகளின் கட்டமைப்பு, செயல்பாடு, ஊக்குவிக்கும் திறன், கல்வி கற்பித்தல் முறை பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து இப்பட்டியலை வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘இ – மெயில்’.. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!
அந்த வகையில், கல்வி நிறுவனங்களின் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை ஆசியா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகமாக ஐ.ஐ.டி. டெல்லி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஐ.ஐ.டி. பாம்பே 2ம் இடத்தையும், ஐ.ஐ.டி. மெட்ராஸ் 3ம் இடத்தையும் பிடித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் முதல் இடத்தை பிடித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.



























