IDBI வங்கியில் புதிதாக 600 காலிப்பணியிடங்கள் – டிகிரி தேர்ச்சி போதும் || Don’t Miss it !
IDBI வங்கி ஆனது 2023-24 ஆம் ஆண்டுக்கான Post Graduate Diploma in Banking and Finance (PGDBF) வங்கி மற்றும் நிதித்துறை பயற்சி அளிக்க உள்ளது. அதன் படி மொத்தம் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து ஆன்லைன் மூலம் 30.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | IDBI வங்கி |
பணியின் பெயர் | Junior Assistant Manager |
பணியிடங்கள் | 600 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.09.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IDBI வங்கி காலிப்பணியிடங்கள்:
2023-24 ஆம் ஆண்டுக்கான Post Graduate Diploma in Banking and Finance (PGDBF) வங்கி மற்றும் நிதித்துறை பயற்சியில் மொத்தம் 600 Junior Assistant Manager பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
IDBI வங்கி வயது வரம்பு:
31.08.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
BHEL நிறுவனத்தில் ரூ.82,620/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
தேர்வு செயல் முறை:
- Online Test
- Personal Interview
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் வரும் செப் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.