
குடும்பத்திற்கு வில்லனாக மாறும் ஜனார்த்தனன்.. இனி நடக்க போவது என்ன? “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பிரசாந்த் ஜீவாவை அடிக்கிறார். இந்த விஷயம் கதிருக்கு தெரிய வர அவர் மீனாவின் அம்மாவிடம் சென்று மிரட்டுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், பிரசாந்த் வேண்டும் என்றே ஜீவாவை வழி மறைத்து வம்பு இழுக்கிறார். அப்போது ஜீவா மாமாவின் பணத்தை எல்லாம் ஏன் ஏமாற்றுகிறாய் என கேட்கிறார். அப்போது பிரசாந்த் நான் அப்படி தான் பணத்தை ஏமாற்றுவேன் உனக்கு என்ன என கேட்டு ஜீவாவை தள்ளிவிடுகிறார். பதிலுக்கு ஜீவா அவனை அடிக்க அந்த நேரம் கதிர் வருகிறார். அவர் பிரசாந்த்தை அடித்து நொறுக்க, உடனே பிரசாந்த் ஜனார்த்தனன் தான் ஜீவாவை அடிக்க சொன்னதாக சொல்கிறார்.
ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – இன்றைய விலை நிலவரம் இதோ!
உடனே ஜீவா கதிர் ஜனார்த்தனன் வீட்டிற்கு கிளம்பி செல்கின்றனர். அங்கே மீனாவின் அம்மா மட்டும் இருக்க, அவரிடம் என் அண்ணனை அடிக்க ஆள் அனுப்பி இருக்கிறார். இனிமேல் இப்படி எல்லாம் செய்தால் வெட்டி கொன்றுவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிடுவேன் என கதிர் சொல்ல, மீனாவின் அம்மா அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். இது குறித்து ப்ரோமோ வெளியான நிலையில், சந்தோசமாக இருக்கும் குடும்பத்தில் மீண்டும் வில்லனாக ஜனார்த்தனன் வருவாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.