ICMR நிறுவனத்தில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலை – தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

0
ICMR நிறுவனத்தில் ரூ.2,18,200/- மாத ஊதியத்தில் வேலை - தேர்வு / விண்ணப்ப கட்டணம் கிடையாது!

Senior Financial Advisor பணிக்கென மத்திய அரசின் ICMR நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.2,18,200/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் ICMR
பணியின் பெயர் Senior Financial Advisor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

ICMR பணியிடங்கள்:

ICMR நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Financial Advisor பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Senior Financial Advisor அனுபவ விவரம்:

Senior Financial Advisor பணிக்கு மத்திய அரசு நிறுவனத்தில் Accounts துறையில் Pay Matrix Level – 13 (Rs.1,23,100 – 2,15,900) என்ற ஊதிய அளவின் கீழ்வரும் Group A பதவிகளில் குறைந்தது 03 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

தமிழக அரசின் 4% அகவிலைப்படி ஓய்வூதியதாரர்கள் யாருக்கெல்லாம் பொருந்தும்? – அரசு உத்தரவு!

Senior Financial Advisor வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 58 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Senior Financial Advisor ஊதிய விவரம்:

இந்த ICMR நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Pay Matrix Level – 14 படி, ரூ.1,44,200/- முதல் ரூ.2,18,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

ICMR தேர்வு செய்யும் முறை:

Senior Financial Advisor பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (20.04.2024) தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!