IBPS CRP SO வேலைவாய்ப்பு 2020
சிறப்பு அலுவலர்கள் கேடர் பதவிகளில் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த பொது ஆட்சேர்ப்பு செயல்முறைக்கு (சிஆர்பி) ஆன்லைன் தேர்வு (பூர்வாங்க மற்றும் முதன்மை) மூலம் ஏராளமான விண்ணப்பத்தார்களை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நியமிக்க உள்ளது. அதாவது I.T. அதிகாரி, வேளாண் கள அலுவலர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, மனிதவள / பணியாளர் அலுவலர் மற்றும் சந்தைப்படுத்தல் அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வங்கி வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் 02.11.2020 முதல் 23.11.2020 வரை இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது.
நிறுவனம் | Institute of Banking Personnel Selection |
பணியின் பெயர் | Specialist Officers (I.T. Officer, Agricultural Field Officer, Rajbhasha Adhikari, Law Officer, HR/Personnel Officer & Marketing Officer) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்கும் முறை | Online |
விண்ணப்பித்தற்கான கடைசி தேதி | 23.11.2020 |
IBPS AFO, IT Officer, Law Officer மற்றும் பிற பதவிகளுக்கான தகுதி :
IBPS கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் / பி.ஜி பட்டம் / பொறியியல் முடித்திருக்க வேண்டும். கல்வித் தகுதி பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
IBPS SO வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

IBPS SO பதவிகளுக்கான தேர்வு செயல்முறை:
IBPS பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பூர்வாங்க தேர்வு (Preliminary Exam), பிரதான தேர்வு (Main Exam) மற்றும் நேர்காணலின் (Interview) அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
IBPS விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் https://www.ibps.in/ என்ற இணைய முகவரி மூலம் 02.11.2020 முதல் 23.11.2020 வரை இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.