இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே!
ICAR-இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Young Professional பணிக்கான காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
ICAR -IARI காலிப்பணியிடங்கள்:
Young Professional பணிக்கென 2 பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Young Professional-I – 1 பணியிடம்
- Young Professional-II – 1 பணியிடம்
கல்வி தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Master degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ICAR -IARI வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BEL நிறுவனத்தில் Junior Assistant வேலைவாய்ப்பு 2025 – ரூ.82,000/- சம்பளம்!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.30,000/- முதல் ரூ.42,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ICAR -IARI தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 20.05.2025ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


























