ஆதார் கார்டு & ரேஷன் கார்டு எளிமையாக அப்டேட் செய்வது எப்படி? முழு விவரம் இதோ!
தமிழக மக்களுக்கு முக்கிய ஆவணமாக ஆதார் கார்டும், ரேஷன் கார்டும் இருக்கிறது. இந்த அடையாள அட்டைகளை எப்படி அப்டேட் செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆன்லைன் அப்டேட்
தமிழகத்தில் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு என்பது மக்களுக்கு தேவையான அடிப்படை ஆவணமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த இரண்டு ஆவணங்களும் அரசின் பலன்களை பெற முக்கியமானதாக இருக்கிறது. அதனால் இந்த இரண்டு ஆவணங்களையும் அப்டேட் செய்து கொள்வது கட்டாயம் ஆகும். மேலும் இந்த ஆவணங்களை அப்டேட் செய்யும் போது உரிய ஆவணங்களை சரியாக சமர்ப்பிக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
ஆன்லைன் மூலம் எளிமையாக இந்த ஆவணங்களை எப்படி அப்டேட் செய்வது என பார்க்கலாம். ஆதார் அப்டேட் செய்ய முதலில் uidai.gov.in.என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின் ஆதார் அப்டேட் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பிழையில்லாமல் துல்லியமாக பூர்த்தி செய்து அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின் ஆதார் சேவை மைய அதிகாரிகள், பயோமெட்ரிக் விவரங்களை சரிபார்த்து, விவரங்களை அப்டேட் செய்வார்கள். இதற்கு ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இலவச ரேஷனுக்கு பதிலாக ரூ.490 வழங்க திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!!
இறுதியாக உங்களுக்கு மையத்திலிருந்து ஒரு ஒப்புகை சீட்டு வழங்கப்படும்.. அதனை வைத்து உங்களின் அப்டேட் விவரங்களை பார்க்கலாம். அதே போல ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, முதலில் https://www.tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அங்கு உள்நுழைவு ஐடியை உருவாக்க வேண்டும். புதிய உறுப்பினரை சேர்க்கும் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். அப்போது புதிய படிவம் கிடைக்கும். அதில் உங்கள் குடும்பத்தில் புதிய நபர்களை பற்றிய முழுமையான தகவலை கொடுக்க வேண்டும். அனைத்து ஆவணங்களும் படிவத்தில் இணைத்து, சமர்ப்பித்தால், உங்களுக்கு ஒரு பதிவு எண் வழங்கப்படும்படிவத்தின் விண்ணப்பத்திற்கு பிறகு அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு, கடைசியாக, ஒப்புதல் வழங்கப்பட்டு, பெயரும் இணைக்கப்பட்டுவிடும்.