ரேஷன் கார்டில் பெயரை நீக்க வேண்டுமா? இதை பாலோவ் பண்ணுங்க!

0
ரேஷன் கார்டில் பெயரை நீக்க வேண்டுமா? இதை பாலோவ் பண்ணுங்க!
ரேஷன் கார்டில் பெயரை நீக்க வேண்டுமா? இதை பாலோவ் பண்ணுங்க!
ரேஷன் கார்டில் பெயரை நீக்க வேண்டுமா? இதை பாலோவ் பண்ணுங்க!

ரேஷன் கார்டில் இருந்து ஆன்லைன் மூலமாகவே எப்படி பெயரை நீக்கம் செய்வது என்பது குறித்த முழு அறிவிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கார்டு:

தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் வழங்கபட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ஆதார் கார்டு போல ரேஷன் கார்டும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. எனவே, அவ்வப்போது சரியாக ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட அப்டேட்களை செய்திருக்க வேண்டும். தற்போது எப்படி ஆன்லைன் மூலமாகவே ரேசன் கார்டில் இருக்கும் பெயரினை நீக்குவது என்பதை காணலாம்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

முதலில் தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்கிற பக்கத்திற்கு சென்று உங்களுக்கு விருப்பமான மொழியை தேர்வு செய்து கொள்ளவும். அடுத்ததாக, மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதை கிளிக் செய்து குடும்ப உறுப்பினர் நீக்க என்கிற ஆப்ஷனையும் கிளிக் செய்யவும். பின்னர், உங்களது ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை பதிவு செய்து OTP எண்ணையும் உள்ளிட வேண்டும். பின்னர், பதிவு செய் என்பதை கிளிக் செய்து அட்டை பிறழ்வு மற்றும் புதிய கோரிக்கைகள் ஆகியவற்றை கிளிக் செய்து ரேஷன் எண் ஆகியவற்றை சரிபார்த்து கொள்ளவும்.

LPG சிலிண்டருக்கான மானியம் வேண்டுமா?உடனே அப்ளை பண்ணுங்க!

பின்பு குடும்ப உறுப்பினர் நீக்க என்பதை தேர்ந்தெடுத்து யாரின் பெயரை நீக்க வேண்டுமோ அதனை செலக்ட் செய்து கொள்ளவும். அடுத்தாக எதற்காக பெயரை நீக்கம் செய்கிறீர்களோ அதன் காரணத்தை கூறி தேவையான ஆவணங்களை இணைத்து பதிவு செய் என்பதை கிளிக் செய்யவும். இதன் பின்னர், ஓரிரு நாட்களில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுவிடும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!