ரயில் பயணிகளே…!! உங்க டிக்கெட்டிற்கு ரிஃபண்ட் வேணுமா…? அப்போ இத மட்டும் பண்ணுங்க..!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணங்களையே அதிகம் விரும்புகின்றனர். காரணம், அதன் குறைந்த டிக்கெட் விலையே ஆகும். மேலும், பெரும்பாலானோர் ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வைத்திருப்பர். அவ்வாறு, முன்பதிவு செய்யப்பட்ட ரயிலை தவற விட்டால் ரிஃபண்ட் கிடைக்குமா..? அல்லது வேறு ரயிலில் பயணிக்க வாய்ப்பு கிடைக்குமா..? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காண்போம்.
அதாவது, ரயில்வே விதிகளின் படி, உங்கள் டிக்கெட் வகையை பொறுத்து ரிஃபண்ட் அல்லது வேறு ரயிலில் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். உதாரணமாக, நீங்கள் பொது டிக்கெட் வைத்திருந்தால் தாராளமாக வேறு ரயிலில் நீங்கள் பயணம் செய்யலாம். ஆனால், இந்த விதி உயர்ரக ரயில்களான ராஜஸ்தானி, சூப்பர்-பாஸ்ட், வந்தே பாரத்திற்கு பொருந்தாது. மேலும், இம்மாதிரியான உயர்ரக ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து, ரயிலை தவற விட்டால் அந்த டிக்கெட்டினை கொண்டு வேறு ரயிலில் பயணம் செய்ய முடியாது.
TNPSC Group 1 Prelims and Mains syllabus in Tamil – Free PDF Download
மேலும், நேரடியாக (ஆஃ லைன்) சென்று டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், நீங்கள் உடனடியாக ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டருக்கு சென்று TDR தாக்கல் செய்வதே சால சிறந்ததாகும். இதன் மூலம் உங்கள் பணம் திரும்ப கிடைக்கும். இதுவே, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தால் IRCTC இணையத்தளத்தில் சென்று TDR தாக்கல் செய்யவும். அதன் பின், 60 நாளுக்குள் உங்கள் பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
அதேபோல், தட்கல் டிக்கெட்டை ரத்து செய்தால் பணம் திரும்ப வழங்கப்படாது. மேலும், முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்தால் 25 % பண பிடித்தம் செய்யப்படும். இதுவே, 12 முதல் 4 மணி நேரம் முன்னதாக ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் 50 % பிடித்தம் செய்யப்படும். மேலும், காத்திருப்பு பட்டியல் மற்றும் RAC டிக்கெட்டுகளை ரயில் புறப்படுவதற்கு 30 நிமிட முன்பு வரை ரத்து செய்யலாம். அதன் பிறகு பணம் திரும்ப தரப்படாது. அத்துடன், மேற்குறிய வழிமுறைகளை தவிர வேறு ஏதேனும் செயல்களை செய்தல் நிச்சயம் அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.


























