TNPSC Group 1 Prelims and Mains syllabus in Tamil – Free PDF Download
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது, தமிழ்நாட்டில் காலியாக உள்ள குடிமை பணிகளுக்காக, ஆண்டுதோறும் குரூப் 1 தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும், இந்த குரூப் 1 தேர்வானது முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் ஆகிய மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது. குறிப்பாக, இதன் முதல்நிலை தேர்வானது கொள்குறி வகையில் (MCQ) 300 மதிப்பெண்களுக்கும், முதன்மை தேர்வானது கட்டாயத் தமிழ் மொழி தகுதி தேர்வு உள்ளிட்ட 3 விளக்க தாள்கள் என மொத்தம் 750 மதிப்பெண்களுக்கும் நடத்தப்படுகிறது. மேலும், இந்த குரூப் 1 தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் இதற்கான பாடத்திட்டத்தை புரிந்து படித்தால் எளிதில் தேர்ச்சி அடையலாம். அந்தவகையில், TNPSC குரூப் 1 முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
TNPSC Group 1 Prelims Syllabus
பகுதி அ. பொது அறிவு (பட்டபடிப்புத் தரம்)
அலகு 1. பொது அறிவியல்:
அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு – பகுத்தறிதல் – பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் – கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்; பேரண்டத்தின் இயல்பு – பொது அறிவியல் விதிகள் – இயக்கவியல் – பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் – அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்; தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள்; உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல்நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்; சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்; அறிவியல் மற்றும் தொழில்நுடபத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்; நடப்பு நிகழ்வுகள்.
அலகு 2. இந்தியாவின் புவியியல்:
அமைவிடம் – இயற்கை அமைவுகள் – பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை – நீர் வளங்கள் – இந்திய ஆறுகள் – மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் – காடு மற்றும் வன உயிரினங்கள் – வேளாண் முறைகள்; போக்குவரத்து – தகவல் தொடர்பு; சமூகப் புவியியல் – மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் – இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்; இயற்கைப் பேரிடர் – பேரிடர் மேலாண்மை; சுற்றுச்சுழல் மாடுபடுதல் – காரணங்களும் தடுப்பு முறைகளும் – பருவநிலை மாற்றம் – பசுமை ஆற்றல்; புவியியல் அடையாளங்கள்; நடப்பு நிகழ்வுகள்.
அலகு 3. இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம்:
சிந்து சமவெளி நாகரிகம் – குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் – விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் – தென் இந்திய வரலாறு; இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்; தேசிய மறுமலர்ச்சி – ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் – இந்திய தேசிய காங்கிரஸ் – தலைவர்கள் உருவாதல் – பி.ஆர். அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சி. சிதம்பரனார், ஜவகர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் பலர்; விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு நிலைகள்; அகிம்சை, இந்திய பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு; இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்; கலை, அறிவியல், இலக்கியம் மற்றும் தத்துவம் ஆகிய வெவ்வேறு துறைகளில் தனித்துவம் கொண்ட ஆளுமைகள்; தேசிய சின்னங்கள் – செய்திகளில் இடம்பெறும் சிறந்த ஆளுமைகளும் இடங்களும் – விளையாட்டு – நூல்களும் ஆசிரியர்களும்; நடப்பு நிகழ்வுகள்.
அலகு 4. இந்திய ஆட்சியியல்:
இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்பின் முகவுரை – அரசியலமைப்பின் முக்கிய குருக்கள் – ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்; குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்; ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் – உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்; கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்; மத்திய – மாநில உறவுகள்; தேர்தல் – இந்திய நீதி அமைப்புகள் – சட்டத்தின் ஆட்சி; பொதுவாழ்வில் ஊழல் – ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் – லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா – தகவல் உரிமை – பெண்களுக்கு அதிகாரமளித்தல் – நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் – மனித உரிமைகள் சாசனம்; இந்தியாவில் அரசியல் கட்சிகளும் மற்றும் ஆட்சியியல் முறைகளும், நடப்பு நிகழ்வுகள்.
அலகு 5. இந்திய பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்:
இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் – இந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு – திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்; வருவாய் ஆதாரங்கள் – இந்திய ரிசர்வ் வங்கி – நிதி கொள்கை மற்றும் பணவியல் கொள்கை – நிதி ஆணையம் – மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு – சரக்கு மற்றும் சேவை வரி; இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை – வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு – தொழில் வளர்ச்சி – ஊரக நலன்சார் திட்டங்கள் – சமூகப் பிரச்சனைகள் – மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு, வறுமை; தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டு குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் – தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு; அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் – இடஒதுக்கீட்டு கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெரும் வாய்ப்புகளும் – தமிழ்நாட்டில் பொருளாதார போக்குகள் – தமிழ்நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநல திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்; சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்; தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அவற்றைன் தாக்கமும்; பல்வேறு துறைகளில் தமிழ்நாடு நிகழ்த்தியுள்ள சாதனைகள்; தமிழ்நாட்டில் மின்னாளுகை; பொது விழிப்புணர்வும் பொது நிர்வாகமும் – நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்படும், பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள்; தற்போதைய சமூகப் பொருளாதார பிரச்சனைகள்; நடப்பு நிகழ்வுகள்.
அலகு 6. தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக – அரசியல் இயக்கங்கள்
தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு; திருக்குறள் – மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் – அன்றாட வாழ்வியலோடு தொடர்பு தன்மை – மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் – திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு – திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்; விடுதலை போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு – ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் – விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு; பத்தொன்பதாம் மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக – அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி – நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் கிளர்ச்சி – சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.
பகுதி ஆ. திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
அலகு 1. திறனறிவு:
சுருக்குதல் – விழுக்காடு – HCF – LCM; விகிதம் மற்றும் விகிதாச்சாரம்; தனிவட்டி – கூட்டு வட்டி – பரப்பு – கொள்ளளவு – காலம் மற்றும் வேலை.
அலகு 2. காரணவியல்:
தருக்கக் காரணவியல் – புதிர்கள் – பகடை – காட்சிக் காரணவியல் – எண் எழுத்துக் காரணவியல் – எண் வரிசை
TNPSC Group 1 Prelims Syllabus – Download PDF here
TNPSC Group 1 Mains Syllabus – Download PDF here


























