facebook விடீயோக்களை மொபைலில் பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு விவரங்கள்!!
மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு சமூக வலைத்தளமான facebook மூலமாக பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டு பகிரப்படுகின்றனர். இந்நிலையில் அந்த விடீயோக்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
facbook அறிவிப்பு:
உலகளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் அதிகம் பயன்படுத்தும் ஒரு சமூக வலைத்தளமான facebook-ல் பல சுவாரஸ்யமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. மேலும் உங்களது பிடித்தமான விடீயோக்களை like, comment, share செய்யும் வசதியை facebook நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் அதனை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்ய முடியாமல் சிரமப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் facebook வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய சில செயலிகள் உள்ளன.
அதிகரிக்கும் ஆன்லைன் வங்கி சேவைகள் – முழு விவரங்கள்!!
ஆனால் அந்த செயலி மூலமாக உங்களது விவரங்கள் திருடப்படலாம். அண்ட்ராய்டு தொலைபேசி மற்றும் மடிக்கணினியில் பேஸ்புக் வீடியோக்களை எவ்வாறு பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
- முதலில் உங்களது ஆண்ட்ராய்டு போனில் facebook செயலியை திறக்க வேண்டும். பின்னர் அதில் உங்களுக்கு பிடித்த வீடியோவை தேர்வு செய்ய வேண்டும்.
- இப்போது அந்த வீடியோ இணைப்பை copy செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
- இப்போது உங்களது மொபைல் பிரௌசரில் fbdown.net என்ற இணையதளத்தை திறக்க வேண்டும்.
- அதில் நீங்கள் தேர்வு செய்ய வீடியோ லிங்கை பேஸ்ட் செய்ய வேண்டும்.
- இதற்குப் பிறகு உங்களுக்கு முன்னால் திறக்கும் அதில் பெயரை டைப் செய்து, பின்னர் எந்த கோப்பில் வீடியோவை சேமிக்க விரும்புகிறீர்கள் என்பதற்கான ஆப்ஷன் இருக்கும். அதனை தேர்வு செய்து சேமிக்க வேண்டும்.
- இப்போது அந்த வீடியோ உங்களது மொபைலில் சேமிக்கப்படும்.