பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் மாற்றம் செய்வது எப்படி…? அதற்கான வழிமுறைகளை இதோ..
மேலும் இந்த மாற்றத்தை சரி செய்ய IRCTC இணையதளத்தில் ‘My Transactions’ அல்லது ‘My Bookings” பகுதிக்குச் சென்று நீங்கள் மாற்ற விரும்பும் டிக்கெட்டைத் தேர்ந்தெடுத்து ‘Change Passenger Name’ அல்லது ‘Transfer Ticket’ ஆப்ஷனை கிளிக் செய்யவும். இதுவே தேதி மாற்றம் என்றால் ”Change Journey Date’ ஆப்ஷனை கிளிக் செய்து புதிய பயணியின் பெயர், வயது மற்றும் பாலினத்தை நிரப்பியவுடன் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி புதிய இ-டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் பெயர் மாற்றக் கட்டணமாக ஒரு பயணிக்கு ரூ.100 , தேதி மாற்ற கட்டணமாக ஒரு டிக்கெட்டுக்கு ரூ.200, பிழை திருத்தம் செய்யப்பட்ட ஒரு டிக்கெட்டுக்கு ரூ. 50 நிர்ணயிக்க பட்டுள்ளது.
மேலும் இந்த பெயர் மாற்றம் ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படும் மற்றும் பயணம் தொடங்குவதற்கு குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன் மாற்றத்தை சரி செய்திருக்க வேண்டும். மேலும் தட்கல் பதிவு செய்யப்பட்ட ஏசி, ஸ்லீப்பர் டிக்கெட்டில் பெயர் மாற்றத்திற்கு அனுமதி இல்லை.
ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் பதிவு செய்த ரயில் டிக்கெட்டில் மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் அசல் டிக்கெட் அல்லது இ-டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் உடன், பயணிகளின் அடையாள அட்டையான “ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்” ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்று எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். அத்துடன் பெயர் மாற்றப்பட்ட அல்லது சேர்க்கப்பட்ட புதிய பயணியின் அடையாள அட்டை மற்றும் விவரங்கள் நிரப்பப்பட்ட படிவத்தை அதிகாரிகளுக்கு சமர்ப்பித்து உங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம்.


























