உங்கள் EPF கோரிக்கை நிராகரிக்கப்படுதா? இது தெரிஞ்சா இனி ஈசி தான்!
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த தொகை அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்த விவரங்கள் பலரும் அறியாமல் உள்ளனர். PF என்பதும் ஒரு வகை சேமிப்பு தான். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணமானது பணி ஓய்வுக்கு பிறகு பெரிதும் உதவுகிறது.
நெருங்கியாச்சு தீபாவளி – இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்!
இதில் கிளைம் செய்யும் போது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது வழக்கமான ஒன்று. KYC முழுமையடையாமல் அல்லது சரிபார்க்கப்படாமல் இருந்தால் கோரிக்கைகள் நிராகரிக்கப்படலாம். வங்கி விவரங்கள் முழுமையடையாமல் அல்லது துல்லியமாக இல்லாமல் இருந்தாலும் க்ளெய்ம் தள்ளுபடி செய்யப்படும். எடுத்துக்காட்டாக, கூட்டுக் கணக்கில் கணக்கு வைத்திருப்பவர்களின் வங்கி அல்லது பிற விவரங்கள் பொருந்தவில்லை என்றால், EPFO கோரிக்கையை நிராகரிக்கலாம். மேலும், வங்கி ஐஎஃப்எஸ்சி குறியீடு பொருந்தவில்லை என்றால் கோரிக்கை நிராகரிக்கப்படும்.


























