
ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கணுமா..? அத நீங்களே 2 நிமிடத்தில் APPLY செய்யலாம்..!! வாங்க எப்படின்னு பார்க்கலாம்..!!
இந்தியாவில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் விதமாக மத்திய அரசு அரிசி,கோதுமை, பருப்பு, எண்ணெய், போன்ற பொருட்களை மானிய விலையில் நியாய விலை கடைகளில் விற்பனை செய்து வருகிறது. அத்தகைய அரசு மானியங்களை பெற வேண்டும் என்றால் ரேஷன் அட்டை கட்டாயம் . அத்தகைய ரேஷன் அட்டையை பெற குறுகிய நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாருங்கள்.
புதிய ரேஷன் அட்டை வாங்க ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
- முதலில் உணவுப்பொருள் வாங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அதிகாரபூர்வ https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- பிறகு, அதில் வலது பக்கத்தில் மின்னணு அட்டை சேவை என்ற காலத்தில் புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க என்ற காலத்தை கிளிக் செய்யவும். புதிய பக்கம் ஓபன் ஆன பிறகு , உங்கள் பெயர், விவரம் மற்றும் வீட்டின் முகவரியை ஒன்றன் பின் ஒன்றாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவு செய்ய வேண்டும்.
- பின்பு, மாவட்டங்களின் பெயர் வரிசையாக கொடுக்கப்பட்டிற்கும், அதில் நீங்கள் வசிக்கும் மாவட்டம் , மண்டலம் மற்றும் கிராமத்தை கிளிக் செய்யவும்.
SBI-ல் 10,000 காலிப் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு…!! ” முழு தகவலுடன் உள்ளே..!!
- அடுத்ததாக அஞ்சல் குறியிட்டு எண், மொபைல் எண், மற்றும் இ-மெயில் முகவரியை ஒன்றன் பின் ஒன்றாக பதிவு செய்த பிறகு குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் பதிவு செய்ய வேண்டும்.
- அதற்கு பிறகு வீட்டின் குடியிருப்பு சான்று, ஆதார் ஆட்டை மற்றும் எரிவாயு இணைப்பு உள்ளிட்ட விவரங்களையும் பதிவேற்றம் செய்து கடைசியாக உங்கள் விவரங்கள் அனைத்தையும் சரிபார்த்து SUBMIT என்பதை கிளிக் செய்தால் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு அதிகாரிகளின் பரிசீலனைக்கு சென்று 2 வாரத்திற்குள் உங்களுக்கு ரேஷன் அட்டை வழங்கப்படும். இத்தகைய அரசின் பல்வேறு விவரங்களை பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள EXAMSDAILY என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்..!
Click Here to Join ExamsDaily Whatsapp Group


























