தமிழகத்தில் நாளை (ஆக.30) ‘இந்த’ ஏரியாக்களில் மின்தடை – முழு List இதோ!
தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் உண்டாகும் பழுதுகளை சரி செய்ய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் நாளை (ஆகஸ்ட் 30) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை மின்தடை ஏற்படக்கூடிய பகுதிகளை பற்றி பார்ப்போம்.
மின்தடை
தமிழகத்தில் மின் விபத்துகள் ஏற்படாமல் இருக்க மின் நிலையங்களில் ஏற்படும் பழுதுகள் உடனடியாக சரி செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணை மின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் இதனை முறையாக தேதி, நேரம் குறிப்பிட்டு அதன்பின் மின்வாரியம் செயல்படுத்துகிறது. அதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள முடிகிறது.
அந்த வகையில் நாளை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (ஆக.30) நிலக்கோட்டை துணை மின்நிலையத்தில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகிக்கப்பட மாட்டாது என்று வத்தலக்குண்டு மின்வாரிய செயற்பொறியாளா் தெரிவித்துள்ளார். இதனால் இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் கீழ்கண்ட பகுதிகளுக்கு நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு – டிக்கெட் ரத்து செய்தால் கட்டணம்!
மேலும் மின்சாரம் பெறும் பகுதிகளான நிலக்கோட்டை நகர், கோடாங்கிநாயக்கன்பட்டி, சங்கால்பட்டி, சி.புதூா், சீத்தாபுரம், குளத்துப்பட்டி, விராலிப்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, என்.ஊத்துப்பட்டி, வீலிநாயக்கன்பட்டி, மல்லணம்பட்டி, குரும்பபட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை, அப்பாபிள்ளைபட்டி, மணியக்காரன்பட்டி, என்.கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (ஆக.30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்