பாரதியை கல்யாணம் செய்ய வற்புறுத்தும் ஹேமா, கண்ணம்மாவின் முடிவு? – பாரதி கண்ணம்மா இன்றைய எபிசோட் !
பாரதி கண்ணம்மா சீரியலில் அடுத்தடுத்து கதையை வேறு பாதையில் நகர்த்தி செல்கின்றனர். அந்த வகையில் தற்போது மேலும் புதிதாக ஒரு கதாபாத்திரம் சீரியலில் இணைந்துள்ளது.
கண்ணம்மாவின் குழப்பம்:
வெண்பா நேற்று பாரதியின் விவாகரத்து வழக்கை நடத்தி வரும் வக்கீலிடம் விசாரித்த விவரங்களை பாரதியிடம் சொல்வதற்காக மருத்துவமனைக்கு வருகிறார். அப்போது பாரதி மீட்டிங்கில் இருக்கிறார். அதையும் மீறி வெண்பா விவாகரத்து பற்றி துருவி துருவி கேட்டுக் கொண்டிருக்கிறார். பாரதி நான் பர்சனல் விஷயங்களை பற்றி பேச விரும்பவில்லை என்று எவ்வளவோ எடுத்து சொல்கிறார். ஆனால் வெண்பா மீண்டும் மீண்டும் அதை பற்றியே பேசுகிறார்.
நீ விவாகரத்து முடிவுல உறுதியா தான இருக்க என்று வெண்பா கேட்கும் பொழுது, நீ திரும்ப திரும்ப கேட்குறத பார்த்த நா முடிவை மாத்திக்கலாம்னு இருக்கேன் என்று பாரதி சொல்லவும் வெண்பா அதிர்ச்சி அடைகிறார். இன்னொரு புறம் கண்ணம்மாவின் வீட்டிற்கு ஹேமா தனியாக வருகிறார். ட்ரைவர் கூட வந்ததாக ஹேமா சொல்கிறார். பின்னர் மெதுவாக கண்ணம்மாவிடம் கல்யாண விஷயத்தை பற்றி ஹேமா கேட்கிறார். நீங்க எங்க அப்பாவ கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு ஒரு அம்மா கிடைப்பாங்க, லக்ஷ்மிக்கு ஒரு அப்பா கிடைப்பாங்க என்று ஹேமா அதை பற்றி பேசுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் தனம் – இவருக்கு பதில் இனி இவரே!
அதான் லட்சுமி அப்பா வர மாட்டார் ல நீங்க எங்க அப்பாவை கல்யாணம் பண்ணிக்கோங்க சமையல் அம்மா என்று ஹேமா கண்ணம்மாவிடம் கேட்கும் போது கண்ணம்மாவிற்கு அழுகை வருகிறது. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது என்று நினைக்கிறார். பின்னர் பாரதியை பார்க்க புதிதாக ஒரு பெண் மருத்துவமனைக்கு வருகிறார். பாரதியிடம் விவகாரத்திற்கு பிறகு என்ன செய்வதாக திட்டம் என்று கேட்கிறார். பாரதிக்கு இவர் யார் எதற்காக வந்திருக்கிறார் என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்துள்ளது.