பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் தனம் – இவருக்கு பதில் இனி இவரே!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் தனம் - இவருக்கு
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் தனம் - இவருக்கு

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் தனம் – இவருக்கு பதில் இனி இவரே!

முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தனம் கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் சுஜிதா விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்களின் மத்தியில் பிரபலமாகி வருகிறது. அதிலும் இந்த சீரியல்களில் நடிக்கும் பிரபலங்கள் மக்களின் மத்தியில் விரைவில் பிரபலமாகி விடுகின்றனர். அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலமாக எக்கச்சக்க ரசிகர்களை சம்பாரித்தவர் தான் தனம். இந்த குடும்பத்தில் மூத்த அண்ணியாக அதாவது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அம்மாவாக இருந்து வருகிறார். அதாவது மூர்த்தியின் தம்பியான கதிர், ஜீவா, கண்ணன் மூவரையும் அம்மாவாக இருந்து தனம் தான் வளர்த்தார். தற்போது வரை தனத்தை அம்மாவாக தான் பார்த்து வருகின்றனர்.

Post Office செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகித விபரம் இதோ!

குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனை வந்தாலும் அவர்களுக்காக பொறுத்து போய் அந்த பிரச்சனையை தீர்ப்பார். பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் அதிகமாக சம்பளம் வாங்குபவரும் இவர் தான். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் தெலுங்கு பதிப்பிலும் தனம் தான் நடித்து வருகிறார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என்கிற விஷயம் தான் ஓடிக் கொண்டிருக்கிறது. முல்லைக்கும் ஆறுதலாக தனம் இருந்து வருகிறார்.

இப்படி சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுஜிதா சீரியலை விட்டு விலகப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுஜிதாவிற்கு பதிலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து கொண்டிருக்கும் சுசித்ரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனம் சீரியலை விட்டு விலகுவதால் ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!