சென்னையில் தொடரும் கனமழை.. 4 ரயில்கள் ரத்து.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!
வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் மிக அதிகனமழை பெய்து வருகிறது. மேலும், இந்த தீவிர மழையால் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் சென்னை பேசின் பாலம் – வியாசர்பாடி ரயில் நிலையங்கள் இடையே மழைநீர் தேங்கி உள்ளது. இதன் காரணமாக சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அவற்றின் விவரங்களை கீழ் காணலாம்.
ஆட்சி அமைய எந்த தியாகத்துக்கும் தயார்.. எடப்பாடி பழனிசாமி முக்கிய கருத்து!!
ரத்து செய்யப்பட்ட ரயில்கள்:
- திருப்பதியில் மாலை 6.05-க்கு புறப்படவுள்ள 16058 சென்னை சென்ட்ரல் ரயில், முழுமையாக ரத்து.
- சென்னை சென்ட்ரலில் மாலை 4.35-க்கு புறப்பட வேண்டிய 16203 திருப்பதி விரைவு ரயில், முழுமையாக ரத்து.
- சென்னை சென்ட்ரலில் இரவு 9.15-க்கு புறப்படவுள்ள 16021 மைசூர் காவேரி ரயில், முழுமையாக ரத்து.
- சென்னை சென்ட்ரலில் இரவு 11 மணிக்கு புறப்படவுள்ள 22649 ஈரோடு ஏற்காடு ரயில், முழுமையாக ரத்து.
Click Here to Join ExamsDaily Whatsapp Group


























