
தமிழகத்தில் இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை…!! 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் நிகழவிருக்கும் வானிலை நிலவரங்களை சென்னை வானிலை ஆய்வு மையம் நாள்தோறும் கணித்து வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி “நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய கூடும்” என அறிவித்துள்ளது.
மேலும், “இன்று காலை 10 மணி முதல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்” தெரிவித்துள்ளது. இதையடுத்து, “தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்” குறிப்பிட்டுள்ளது.























