
HDFC வங்கியில் அக்கவுண்ட் இருக்க உங்களுக்கு..!! அப்போ இந்த வாழ்நாள் இலவச கிரெடிட் கார்டு வாங்க தவறாதீங்க..!!
மக்களின் நிதி பரிவர்த்தனைகள் பெரும்பாலும் வங்கியிடமிருந்து கடன் பெறும் முறையை சார்ந்தே அமைகிறது. அந்த வகையில், எச்டிஎஃப்சி (HDFC) வங்கி கடன் பெறும் பயனாளருக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகையில் ஒன்றாக “லைஃப் டைம் ஃப்ரீ கிரெடிட் கார்டு”களை அளிக்கிறது. இந்த லைஃப் டைம் இலவச கிரெடிட் கார்டுகளை பற்றி இப்பதிவில் காண்போம்.
அதாவது, HDFC வங்கி மில்லேனியம், டைனர்ஸ் கிளப், ப்ரிவில்லேஸ், பிஸ் குரோ, பிக்சல் ப்ளே மற்றும் பிக்சல் கோ ஆகிய கிரெடிட் கார்டுகள் வாழ்நாள் முழுவதும் இலவசமாக பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது . இந்த வாழ்நாள் இலவச கிரேடிட் கார்டுக்கு டிசம்பர் 17, 2024 முதல் ஜனவரி 16, 2025 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வங்கி தெரிவித்துள்ளது. மேலும், ஸ்விக்கி எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு, டாடா நியூ பிளஸ் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு மற்றும் டாடா நியூ இன்ஃபினிட்டி வங்கி கிரெடிட் கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் இல்லாத பண்டிகை கால சலுகைகளை 31 டிசம்பர் 2024 வரை வழங்குகிறது. இதை தொடர்ந்து மில்லேனியம் கிரெடிட் கார்டு வாடிக்கையாளர் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் பண பரிமாற்றம் செய்தால் பராமரிப்பு கட்டணமான ரூ 1000 தள்ளுபடி செய்யப்படும் என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது.


























Y Yen nangava vangitu padurathu pathalaya.yen middle class people ipadi panuringa
Iam work for Southern railway