இனி மாணவர்களுக்கு பாஸ்போர்ட் Free…, அசத்தலான திட்டம் அறிவித்த அரசு..!!
கடந்த சில ஆண்டுகளாக, வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் உலகமயமாக்கல் போன்ற பரிணாம வளர்ச்சி பாஸ்போர்ட்டுக்கான தேவையை அதிகரித்துள்ளது. மேலும் கல்வி, சுற்றுலா, மருத்துவ மற்றும் வணிக ரீதியான பயணத்திற்காக வெளிநாடு செல்வோருக்கு பாஸ்போர்ட் இன்றியமையாத பயண ஆவணமாக திகழ்கிறது. இந்நிலையில் மத்திய அரசு தற்போது இந்திய பயணிகளிடையே பாஸ்போர்ட் பயன்பாட்டை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்தியுள்ளது.
அதாவது ஹரியானா முழுவதும் உள்ள தொழில்துறை பயிற்சி நிறுவனங்களில் (ITI) படிக்கும் மாணவர்கள் பாஸ்போர்ட்டை இலவசமாகப் பெற அம்மாநில அரசு வழிவகுத்துள்ளது. இந்த திட்டம் வெளிநாட்டில் தொழில் வாய்ப்புகளை எளிதாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, இத்திட்டத்தில் பயன்பெற மாணவர்கள் சில தகுதி நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்த இலவச பாஸ்போர்ட் திட்டத்திற்கு தகுதி பெற, மாணவர் ஹரியானாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும் அல்லது ஹரியானா பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் 10 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 80% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகும். மேலும், இத்திட்டத்தின் முழு பயனை பெற மாணவர்கள் இன்டெர்வியூவில் தொழில் நிறுவனங்களால் வழங்கப்படும் அனுமதி அட்டை ஆவணத்தை பாஸ்போர்ட் விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும் என்றும், தங்கள் இறுதி ஐடிஐ தேர்வுக்கு குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னதாக பாஸ்போர்ட் விண்ணப்பித்திருக்க வேண்டும் எனவும், குருகிராம் மாவட்ட பெண்கள் பங்கேற்பை அதிகரிக்க இறுதியாண்டு மாணவர்களிடையே இந்த முயற்சி தீவிரமாக ஊக்குவிக்கப்படுகிறது என்று ஐடிஐயின் “முதல்வர் ஜேபி யாதவ்” திட்டவட்டமாக கூறியுள்ளார்.



























