அரசுப்பணி பெற இதெல்லாம் தெரிஞ்சுக்கணும் – முக்கிய தலைப்புகள்!
இந்திய நாட்டில் உள்ள மத்திய மற்றும் மாநில அரசு பணிக்கு தேர்வர்கள் கட்டாயம் நாட்டின் வரலாறுகளையும், சுதந்திரத்தின் முன் மற்றும் பிந்தைய கால நிலவரங்களையும் தெரிந்திருக்க வேண்டும். இதே போலவே அந்தந்த மாநில வரலாறுகளையும் அறிந்திருக்க வேண்டும். போட்டித்தேர்வு நிபுணர்களின் கருத்துப்படி, போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் போது பாடத்திட்டத்தை பார்த்து தலைப்பு வாரியாக மட்டுமல்லாமல் காலக்கிராம வரிசையில் இந்திய மற்றும் தமிழக வரலாற்றை ஒப்பிட்டு படிக்க வேண்டும்.
37 நாட்களில் TNPSC Group 4 தேர்வு.. இந்த கேள்விகள் படிச்சாச்சா??
குறிப்பாக, தலைவர்கள் உருவாதல், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்கள், புத்தகங்கள் சார்ந்த கேள்விகள், தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள் மற்றும் இயக்கங்கள், பிரிட்டிஷார் கொண்டுவந்த சீர்திருத்தங்கள், வைசிராய்கள், ஐரோப்பியர்களின் வருகை, விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு, காலக்கிரம நிகழ்ச்சிகள், விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு போன்ற தலைப்புகளின் முழு அறிவையும் தேர்வர்கள் பெற்றிருக்க வேண்டும்.