வெற்றிக்கான 7 டிப்ஸ்.. TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? – முழுசா பாருங்க!

0
வெற்றிக்கான 7 டிப்ஸ்.. TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? - முழுசா பாருங்க!

வெற்றிக்கான 7 டிப்ஸ்.. TNPSC குரூப் 4 தேர்வு எழுத போறீங்களா? – முழுசா பாருங்க!

TNPSC குருப் 4 தேர்வில் அதிக மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் என குழப்பமா? இந்த பாயிண்ட்ஸ் மிஸ் பண்ணாதீங்க.

தேர்வு டிப்ஸ்

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நடத்தப்படும் குரூப் 4 தேர்வில் லட்சக்கணக்கான இளைஞர்கள் விண்ணப்பிப்பார்கள். ஆனால் அதில் சிலரே வெற்றி பெறுவார்கள்.அவர்களால் எப்படி வெற்றி பெற முடிகிறது என பார்க்கலாம். அதற்கு சில டிப்ஸ்களை கட்டாயம் பாலோ செய்ய வேண்டும். அவை என்னென்ன என்று விளக்கமாக பார்க்கலாம்.

பாடத்திட்டம்

முதலில் குரூப் 4 தேர்வுக்கு என்னென்ன பாடங்கள் வரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொள்ளாமல் படித்தால் தேவை இல்லாத தலைப்புகளை படித்து நேரத்தை வீணடிப்பீர்கள்.

நேரம் ஒதுக்குதல்

தேர்வுக்கான பாடத் திட்டங்களை தெரிந்து கொண்டு, எந்தெந்த தலைப்புகளை எவ்வளவு நேரம் படிக்க வேண்டும் என நிர்ணயித்து, அதற்கான நேரத்தை ஒதுக்கி படிக்க வேண்டும்.

ரிவிசன் செய்தல்

தேர்வுக்கு ஒரு நாளில் படித்ததை, மறுநாள் ரிவிசன் செய்வது கட்டாயம் ஆகும். இல்லையென்றால் படித்தது மறந்துவிடலாம். மேலும் தினமும் நீங்களே மாதிரி தேர்வுகளை நடத்தி சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அரசுப்பணி பெற இதெல்லாம் தெரிஞ்சுக்கணும் – முக்கிய தலைப்புகள்!

கடந்த ஆண்டு வினாத்தாள்

தேர்வுக்கு பாடங்களை மட்டும் படிக்காமல் கடந்த ஆண்டு கேட்கப்பட்ட கேள்விகளையும் படிக்க வேண்டும். ஏனெனெனில் சில கேள்விகள் வழக்கமாக கேட்கப்பட்டு வருகிறது.

மீண்டும் மீண்டும் படித்தால்

ஒரு முறை படித்த பின் அதை அப்படியே விட்டு விடாமல் தினமும் படிப்பதற்கு முன் ஏற்கனவே படித்ததை மீண்டும் படிக்க வேண்டும்.

கணக்கு பாடம்:

பொது அறிவுப் பகுதியில் உள்ள கேள்விகளில் 25/100 கணிதப் பகுதியிலிருந்து கேட்கப்படுகின்றன. பெரும்பாலான மாணவர்கள் கணிதப் பகுதியைக் கடினமாக நினைக்கின்றனர். ஆனால் இதில் நிறைய மதிப்பெண் எடுக்கலாம்.

நடப்பு நிகழ்வுகள்:

TNPSC தேர்வில் பெரும்பாலான நடப்பு நிகழ்வுகள் சார்ந்த கேள்விகள் தேர்வுக்கு கேட்கப்படும். இதை எழுத முந்திய மாதத்திலிருந்து அதிகபட்சம் ஒரு வருட காலத்துக்குப் படிக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!