
உடனடி பண தேவையா..?? ரூ.12 லட்சம் வரை கடன் வழங்கும் கூகுள் பே.. விண்ணப்பிக்கும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க..!!
“இந்த கடன் பணமானது GPay நிறுவனத்தால் நேரடியாக வழங்கபடாது என்றும் அதற்கு பதிலாக, வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFC) மூலம் உங்கள் விண்ணப்பம் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே கடன் வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, “தகுதியுள்ள பயனளர்களின் நிதி சுயவிவரத்தைப் பொறுத்து ரூ.30,000 முதல் ரூ.12 லட்சம் வரையிலான கடன் தொகைகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 11% இல் தொடங்குகின்றன என்றும், உங்கள் கிரெடிட் ஸ்கோர், வருமானம் மற்றும் கடன் தொகையைப் பொறுத்து வட்டி விகிதம் மாறுபடும்” என கூறப்பட்டுள்ளது. மேலும், “கடன் வாங்குபவர்கள் 6 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான கால அவகாசத்தை தேர்வு செய்யும் வசதியும் உண்டு. இந்த கடனை பெற GPay சில நிபந்தனைகள் வைத்துள்ளது. அதை பூர்த்தி செய்யும் பட்சத்தில் கடன் தொகை நேரடியாக பயனரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

























