ஒரே நாளில் தாறுமாறாக எகிறிய தங்கம் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!

0
ஒரே நாளில் தாறுமாறாக எகிறிய தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்...!
ஒரே நாளில் தாறுமாறாக எகிறிய தங்கம் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்...!
ஒரே நாளில் தாறுமாறாக எகிறிய தங்கம் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்…!

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாகவே தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 440 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை:

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த இரண்டு நாட்களாகவே தொடர்ந்து குறைந்து வந்தது. ஆனால், தற்போது வார விடுமுறை என்பதால் தங்கத்தின் விலை சற்று உயர்ந்திருக்கிறது. அதாவது, சென்னையில் நேற்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 32 குறைந்து 6092 ரூபாய்க்கும், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 48,736 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

மத்திய அரசில் Project Technician காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.18,000/- || தேர்வு கிடையாது!

நேற்றைய விலையுடன் ஒப்பிடும்போது இன்று தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. அதாவது சென்னையில் இன்று 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 55 ரூபாய் அதிகரித்து 6147க்கும், சவரனுக்கு 440 அதிகரித்து 49,176 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சென்னையில் வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு 78 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ஒரு ரூபாய் அதிகரித்து 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!