Today Gold Rate: இனி குறைய வாய்ப்பே இல்லை.. வார இறுதியில் மீண்டும் எகிறிய தங்கம் விலை..!!
உலக நாடுகள் மத்தியில் நிகழும் போர் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூடுதல் வரி விதிப்பு போன்ற காரணங்களால் சர்வதேச பங்குசந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளன. எனவே கடந்த சில வாரங்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது. இவ்வாறு தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால், மக்கள் தங்களின் எதிர்பாராத தேவையை நிவர்த்தி செய்ய உதவும் முதலீடான தங்கத்தை வாங்க முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளன.
இந்நிலையில், “தமிழகத்தில் நேற்று (17-04-2025) தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,360 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று (18-04-2025) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 71,560 ஆகவும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,945 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளி விலை தொடர்ந்து மூன்றவாது நாளாக எவ்வித மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.110 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,10,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது”.
























