தமிழகத்தில் யார் யாருக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி? அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் தகுதியானவர்களுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுன் உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுன் உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் கூறப்பட்டிருந்தது. அந்த அறிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட 5 பவுன் உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
Atos IT நிறுவனத்தில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு – பட்டதாரிகள் கவனத்திற்கு! விண்ணப்பங்கள் வரவேற்பு!
இந்நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கடந்த ஆட்சியில் நடைபெற்ற பயிர்க்கடனில் முறைகேடு நடந்திருப்பதாகவும், அவ்வாறான தவறுகள் நகைக்கடன் தள்ளுபடியிலும் நடைபெற்றிருப்பதாக அமைச்சர் கூறினார். அதனை தொடர்ந்து தற்போது தகுதியானவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செப்.24ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் – வெளியீடு!
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது, யார் முறைகேடுகளில் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும். தகுதியானவர்களுக்கு 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். அதிமுக ஆட்சியில் குவாரி, தரிசு நிலங்களுக்கு கூட பயிர்க்கடன் தந்து மோசடி செய்துள்ளனர். ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் பயிர்க்கடன் தருவதற்கு பதில் ரூ.80 ஆயிரம் வரை தந்துள்ளனர். விவசாயம் செய்யாதவர்களுக்கு கடந்த திமுக ஆட்சியில் மூன்று லட்சம் வரை கடன் கொடுத்துள்ளனர். ஒரு அளவு இல்லாமல் விருப்பப்படி கடன் வழங்கி அதிமுக ஆட்சியில் மோசடி செய்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.