ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
தமிழக அரசு வேலைவாய்ப்பு
தமிழக அரசு வேலைவாய்ப்பு
ரூ.15,000/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஆய்வக நுட்புநர்‌ தரம்‌ II பணியிடங்களை நிரப்ப இராமநாதபுரம்‌, அரசு மருத்துவக்‌ கல்லூரி மற்றும்‌ மருத்துவமனையில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இந்த அரசு பணிக்கு என 34 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • ஆய்வக நுட்புநர்‌ தரம்‌ II பதவிக்கு என 34 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Diploma in Medical Laboratory Technology முடித்திருக்க வேண்டும்.
  • அரசு மருத்துவக் கல்லூரி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • 11 மாதங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில்‌ மாதம்‌ ரூ.15,000/ ஒப்பந்த ஊதியம்‌ வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கல்வித்‌ தகுதி / சாதிச்சான்று / ஆதார்‌ நகல்‌ என அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நாளை (15.10.2022) இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள்.

Download Notification 2022 Pdf 
Exams Daily Mobile App Download

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!