
பிணையமில்லாமல் ரூ.3 லட்சம் வரை கடன் பெறனுமா..?? அப்போ மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரிஞ்சுக்கோங்க..!!
இந்தியா முழுவதும் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் பாரம்பரிய கைவினைஞர்களின் நிதிப் போராட்டங்களைத் தீர்க்க, மத்திய அரசு “பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை” (PMVY) அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம், பழங்கால வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள தனிநபர்களுக்கு வெறும் 5% வட்டி வீதத்தில் ரூ.3 லட்சம் வரை பிணையமில்லாத கடன் அளிக்கிறது. மேலும், முறைசாரா துறையில் உள்ள வியாபாரிகள் எதிர்கொள்ளும் சவால்களை நிர்வகிக்கவும், சுயசார்பு மற்றும் வணிக வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்க உதவுகிறது.
இத்திட்டத்திற்கு “விண்ணப்பிக்கும் நபர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்திற்கு ஒரு உறுப்பினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதைத்தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளில் PMEGP முத்ரா அல்லது PM ஸ்வாநிதி போன்ற பிற திட்டங்களிலிருந்து நன்மைகளைப் பெற்றவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்கள் என்றும், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இந்தத் திட்டத்திலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், “கடன் தொகையானது இரண்டு நிலைகளில் வழங்கப்படுகிறது. அதாவது, அடிப்படைப் பயிற்சிக்குப் பிறகு ரூ.1 லட்சம், அதைத் தொடர்ந்து மேம்பட்ட பயிற்சியை முடித்த பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனையாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வியாபாரிகள் தங்கள் வணிகங்களை டிஜிட்டல் வழி ஒருங்கிணைப்பை ஊக்குவிக்க “pmvishwakarma.gov.in” என்ற அதிகாரப்பூர்வ போர்டலை பார்வையிடும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

























