ஆப்கான் அரசு அதிகாரிகளுக்கு ‘பொது மன்னிப்பு’ – பணிக்கு திரும்ப தலிபான்கள் உத்தரவு!
ஆப்கானிஸ்தான் நாட்டில் அரசு பணிகளில் வேலை செய்து வந்த அதிகாரிகளை பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ள தலிபான்கள் அவர்கள் பொது மன்னிப்பு கோர வேண்டும் என ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பொது மன்னிப்பு:
ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உலக நாடுகளை சற்று திகிலடைய செய்துள்ள தலிபான்கள் தங்களது நோக்கம் நிறைவேறியதாக வெற்றிக்களிப்பில் திளைத்து வருகின்றனர். 20 ஆண்டு காலத்துக்கு முன்னதாக அதாவது 1996-2001 களில் ஆப்கானிஸ்தானில் கொடுங்கோல் ஆட்சி செய்து வந்த தலிபான்கள் பொது மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும், பெண்கள் பள்ளிக்கு செல்வதை தடுத்தும், குற்றம் புரிந்தவர்களை கல்லால் அடித்தும் கொலை செய்தும் வந்தனர். இதை தொடர்ந்து அங்கு ஆட்சியமைத்த மக்களரசு இவை எல்லாவற்றிற்கும் ஒரு தீர்வை கொண்டு வந்தது.
IPL T20 கிரிக்கெட் போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு அனுமதி? வெளியான தகவல்!
ஆனால் நாட்டை இழந்து தோல்வியை தழுவிய தலிபான்கள் சுமார் 20 ஆண்டுகால போராட்டத்துக்கு பின்னர் மீண்டுமாக ஆப்கானிஸ்தானை தன் வசமாக்கி தங்களது நோக்கத்தை நிறைவேற்ற துவங்கியுள்ளனர். அதன் முதல் பகுதியாக ஆப்கானிஸ்தான் நகரங்களில் செயல்பட்டு வந்த சலூன் உள்ளிட்ட முக்கிய கடைகளில் விளம்பரத்துக்காக வரையப்பட்டிருந்த பெண்களது புகைப்படங்களை சுவர்களில் இருந்து அழித்து வருகின்றனர். இதை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை தலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.
TN Job “FB
Group” Join Now
அதாவது வழக்கமான வாழ்க்கையை முழு நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும் என்றால் அனைவரும் ஒரு பொது மன்னிப்பு கோர வேண்டும் என அறிவித்துள்ளது. “அரசாங்கத்தின் எந்தப் பகுதியிலும் அல்லது எந்த துறையிலும் பணிபுரிபவர்கள் தங்கள் பணிகளை முழு திருப்தியுடன் மீண்டும் தொடங்க வேண்டும். மேலும் எந்தவித அச்சமும் இல்லாமல் தங்கள் கடமைகளை தொடர வேண்டும் என்றால் அதற்கு நிபந்தனையாக பொது மன்னிப்பு கோர வேண்டும்” என்று தலிபான் அறிக்கை தெரிவித்துள்ளது.