முகேஷ் அம்பானியை வீழ்த்திய கவுதம் அதானி..! குறைந்த சொத்தின் மதிப்பு ..!
உலகின் டாப் 100 பணக்காரர்களின் பட்டியலில் ஒருவரான முகேஷ் அம்பானி ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியலின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். ஆனால், தற்போது இவர் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவு அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது , ஹுருன் ஆராய்ச்சி வெளியிட்ட அறிக்கையின் பட்டியலில் இந்திய பணக்காரர்களின் பட்டியலில் 11.61 லட்சம் கோடி மதிப்பில் கவுதம் அதானி முதல் இடத்திலும் , 10.14 லட்சம் கோடி மதிப்பில் முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தை பிடித்து பின்னடைவை சந்தித்துள்ளார் . மேலும், 3.14 லட்சம் கோடி மதிப்பில் HCL நிறுவனர் ஷிவ் நாடார் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளார்


























