இயற்கை அழகை கண்டுகளிக்க இலவச ரயில் சேவை…!! ” உங்களுக்கு இது தெரியுமா”..??
மக்களின் நீண்ட தூர பயணங்களில் ரயில் சேவைகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அதாவது, மற்ற போக்குவரத்து சேவைகளை ஒப்பிடும் போது ரயில் டிக்கெட்டுகளின் விலை சற்று குறைவாக காணப்படுகிறது. அதே சமயம் பயணிகளுக்கு எண்ணற்ற வசதிகள் கிடைப்படுவதாலும் ரயில் பயணங்களை மக்கள் அதிக அளவில் விரும்புகிறார்கள். மேலும், நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 13,000 ரயில்கள் இந்திய ரயில்வே துறையால் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், முதலில் டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். ஆனால், கடந்த 75 ஆண்டுகளுக்கு மேலாக எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் , இலவச பயணத்தை வழங்கும் ரயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா..? தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவை தொகுத்து வழங்கியுள்ளோம்.
பொதுமக்கள் கவனத்திற்கு… தஞ்சாவூர், திருவள்ளூரில் நாளைய மின்தடை பகுதிகள்… லிஸ்ட் இதோ..
பக்ராநங்கல் ரயில் சேவை: பக்ராநங்கல் அணைக்கட்டும் போது அப்பகுதிகளுக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்ததால், 1948ம் ஆண்டு இப்பகுதிகளில் முதன் முதலாக ரயில் சேவை தொடங்கப்பட்டது. மேலும் அணைக்கட்ட தேவைப்படும் கனரக இயந்திரங்களை கொண்டு செல்வதற்கும் மற்றும் மக்களின் போக்குவரத்து பயணங்களை எளிதாக்கும் வகையிலும் இந்த ரயில் சேவை தொடங்கப்பட்டது என்று இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும், இது நீராவி இயந்திரங்களால் இயக்கப்பட்டு வந்ததை, 1953ம் ஆண்டு நவீன இயந்திரங்களாக மாற்ற அமெரிக்காவிலிருந்து 3 இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு நவீன இன்ஜினாக மாற்றப்பட்டன.
இந்த இலவச ரயில் சேவை காலை 7.05 மணி அளவில் நங்கல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, பக்ராவுக்கு காலை 8.20 மணி அளவில் வந்தடையும். மீண்டும், நங்கலில் இருந்து மதியம் 3.05 மணிக்கு புறப்பட்டு, பக்ரா ரயில் நிலையத்திற்கு மாலை 4.20 மணி அளவில் பயணிகளை இறக்கி விடும். இந்த ரயிலில் பயணிக்கும் போது செடி கொடிகள் நிறைந்த இயற்கை அழகையும், குதிரை காலணி வடிவ சுரங்கங்கள் மற்றும் 158.5 உயரம் கொண்ட சாலை பாலங்களை கடந்து செல்லும் காட்சிகளை எல்லாம் நம்மால் கண்டுகளிக்க முடியும்.



























Kavya,age 24,b.com