இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா..!! “நிர்மலா சீதாராமன் பங்கேற்பு”..!!
கோவை மாவட்டத்தில் GENERAL INSURANCE OF INDIA மற்றும் வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் நலத்திட்டத்தின் கீழ் ஏழை எளிய பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. மேலும், அப்பெண்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் விழா மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கோவை இந்துஸ்தான் கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதுமட்டுமின்றி, பயிற்சி பெற்ற 1500 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரத்தை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கினார்.
இலவசமாக 5 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு||மத்திய அமைச்சரவை அறிவிப்பு..!!



























